இஸ்லாமிய உள்ளங்களை மகிழ்வுடன் இத்தளத்திற்கு வரவேற்கின்றோம்.. 24 மணித்தியால இஸ்லாமிய இணையத்தள வானொலி Hashmath Radio...

About



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

கனடா நாட்டின் உயர்தொழிநுட்பங்களைக் கொண்டு இலங்கையிலிருந்து ஒலித்து பல இலட்சக்கணக்கான சொந்தங்களை தன்பக்கம் ஈர்த்த அபிமான ''றெட்றோஸ் ஊடக வலையமைப்பு'' கடந்த காலங்களில் Red Rose FM  24 மணிநேர இணைய வானொலியை உருவாக்கி தேசம்கடந்து தமிழ்பேசும் மக்களை அன்பால் இணைத்து தனக்கென தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றெட்றோஸ் ஊடக வலையமைப்பினுடைய மற்றுமொரு பாரிய முயற்சியாக கலாச்சார இணையத்தள வானொலியொன்றை நிறுவ எண்ணியபோது அதன் முதற்கட்டமாக முஸ்லிம் சமய கலாச்சார வானொலியை ஒலிபரப்ப எண்ணியுள்ளது

இதனடிப்படையில் கத்தார் நாட்டிலிருந்து உயர்தொழிநுட்பங்கள் ஊடாக இலங்கைப் படைப்பாளர்களைக் கொண்டு சர்வதேசமெங்கும் ஒலிக்கும் வண்ணம் 24மணிநேர  கொள்கை முரண்பாடுகளைக் களைந்த தூய இஸ்லாமிய நிகழ்ச்சிகளை வழங்க 'Hashmath Radio' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசமெங்கும் ஒலிக்கும் 'Hashmath Radio' இணைய வானொலியை நேயர்கள் www.HashmathRadio.com எனும் இணையத்தள முகவரி ஊடாக 24 மணிநேரமும் கேட்கலாம்.

தமிழ்பேசும் முஸ்லிம்களின் உறவுப்பாலமாகவும் முஸ்லிம்களின் அடையாளமாகவும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஒருமித்த குரலாகவும் Hashmath Radio வடிவமைக்கப்பட்டுள்ளது.

Red Rose / Red Rose FM  ஊடகத்திற்கு நீங்கள் வழங்கிய மகத்தான ஆதரவிற்கு எங்கள் கோடானகோடி நன்றிகள்
அதேபோன்ற ஆதரவினை Hashmath Radio விற்கும் வேண்டிநிற்கின்றோம்.

Red Rose Media Unit
Muslim Culture Divition
Hashmath Radio
Sri Lanka & Qatar & Canada